shadow

images (2)

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 250 கிராம்,

வெங்காயம் – 2

சீரகத் தூள் – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 5,

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கு

கொத்தமல்லி தழை – சிறிதளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

* சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* சிக்கனில் மஞ்சள் தூள் போட்டு நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், மிளகு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன், சீரகம் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

* பின்னர் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

* கொதி வந்ததும் குக்கரை மூடி 2 விசில் போடவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து மிதமான தீயில் வைக்கவும்.

* சிக்கனில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான மிளகு சிக்கன் குழம்பு ரெடி.

Leave a Reply