shadow

50 நாட்களை கடந்தும் சோதனை தொடர்கிறது. சம்பளம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் திணறல்

அரசு ஊழியர்கள், மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வங்கியில் அவர்களது சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அந்த சம்பளத்தை எடுக்க பெரும்பாலான ஏ.டி.எம்.கள் வழக்கம் போல் மூடியே உள்ளது.

நாள் ஒன்றுக்கு ஜனவரி 1 முதல் ரூ.4500 எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் ஏ.டி.எம்கள் பூட்டியிருந்தால் பணத்தை எங்கே போய் எடுப்பது என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

நேற்று முதல்  2வது மாதமாக அரசு ஊழியர்கள், மாத ஊழியர்கள் சம்பள பணத்தை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதால் உடனடியாக மத்திய அரசு அனைத்து ஏடிஎம்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply