shadow

தெருநாய்களை விஷ ஊசி போட்டு கொல்ல கேரள முதல்வர் உத்தரவு

dogsகேரளாவில் வெறி பிடித்த தெருநாய்களின் அட்டகாசத்தால் நாளுக்கு பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெறிநாய்களை கட்டுப்படுத்த இன்று கேரள முதல்வரின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெறி பிடித்த தெருநாய்களை விஷ ஊசி போட்டு கொல்ல முதல்வர் உத்தரவிட்டார். இந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் முதல்வரின் இந்த முடிவுக்கு விலங்குகள் நல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விலங்குகளுக்கான மனிதர்கள் நல அமைப்பின் (People For Animals) கேரள மாநில பிரதிநிதியான ரனீஷ் பெரம்பா கூறியபோது, தெருநாய்களுக்கு கடைத்தடை செய்து கட்டுப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

ஆனால், தெருநாய்களின் அத்துமீறல் பெருகி வருவதற்கான அடிப்படையான வேர் காரணத்தை இந்த அரசு கவனித்தாக வேண்டும். உணவுக்கழிவுகள் மற்றும் குப்பை கூளங்களை உரிய முறையில் அப்புறப்படுத்த முன்வராத மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் குளறுபடிகளை களைய அரசு மின்வர வேண்டும்.

அவ்வாறின்றி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி நாய்களை சுட்டுக் கொல்ல முடிவெடுத்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply