கொரோனா அச்சத்தால் 5ஜி டவரை எரித்த பொதுமக்கள்: வதந்தியால் ஏற்பட்ட விபரீதம்

கொரோனா உயிரிழந்தவர்களை விட கொரோனா குறித்த வதந்தி பொதுமக்களை பெரிதும் பாதித்து வருகிறது

குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் திடீரென அங்கு சமூகவலைதளத்தில் ஒரு வதந்தி பரவியது

அதாவது 5ஜி செல்போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சு நுரையீரலில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சிவிடும் என்பதுதான். அந்த வகையில் ஏற்கனவே கொரோனா அச்சத்தில் இருந்த இந்த மக்கள் இந்த வதந்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்து கண்ணில் தெரியும் 5ஜி டவரை எல்லாம் தீ வைத்து எரித்தனர் இந்த சம்பவத்தால் இங்கிலாந்து நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதோடு இது குறித்த வதந்தி பரப்பியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர் இதுகுறித்து செல்போன் நிறுவனங்கள் கருத்து கூறிய போது 5ஜி டவரால் ஆபத்து வரும் என்று அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்

Leave a Reply