shadow

 afzal guruபாராளுமன்ற கட்டிடம் தாக்குதல் வழக்கில் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை அவருடைய குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமீபத்தில் பதவியேற்ற காஷ்மீர் எம்.எல்.ஏக்கள் வைத்த கோரிக்கையை மறுத்த மத்திய அரசு அப்சல்குருவின் உடலை ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்து உள்ளது.

காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீத் பதவியேற்ற மறுநாளே காஷ்மீர் தேர்தல் அமைதியாக நடைபெற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஒத்துழைப்புதான் காரணம் என்று கூறிய சர்ச்சையே இன்னும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அடங்காத நிலையில் 8 காஷ்மீர் எம்.எல்.ஏக்கள் அப்சல்குருவின் உடலை அவரது குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சியின் இத்தகைய கருத்துகள், காஷ்மீர் மாநில பா.ஜ.க. மற்றும் டெல்லி பாஜக தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply