shadow

அதிசயம்-அற்புதத்தை விமர்சனம் செய்யாத ஒரே அரசியல் தலைவரும் விமர்சனம் செய்தார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு வார்த்தை அல்லது இரண்டு வார்த்தை பேசினால் கூட அது தலைப்புச் செய்தியாக மாறும் என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறி வருவது உண்மைதான் என்பதுபோல் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது

எடுத்துக்காட்டாக ரஜினிகாந்த் கூறிய அதிசயம் அற்புதம் என்ற இரண்டு வார்த்தைகள் இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆனது. தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ரஜினி கூறிய இந்த வார்த்தைகளை குறித்து விமர்சனம் செய்தனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியின் அதிசயம் அற்புதம் குறித்து இதுவரை விமர்சனம் செய்யாமல் இருந்தவர் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் மட்டுமே என்று கூறப்பட்டது. ஏனெனில் இவர் கடந்த சில மாதங்களாக சிறையில் இருந்ததால் இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த ப சிதம்பரம் ரஜினியின் அரசியல் அற்புதம் குறித்து கருத்து தெரிவித்தபோது ’2021இல் என்ன அதிசயம் அற்புதம் நடக்கும் என்பதை ரஜினி தான் சொல்லவேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *