shadow

தனுஷ் பாடிய அட்டகாசமான பாடல் ரிலீஸ்! ரசிகர்கள் குஷி

தனுஷ் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர் மற்றும் பாடலாசிரியர், பாடகர் என்பது அனைவரும் தெரிந்ததே

அவர் எடுக்கும் படங்கள் மட்டுமன்றி மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களிலும் அவர் அவ்வப்போது பாடி வருவது தெரிந்ததே

இந்த நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘பட்டாஸ்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை தனுஷ் பாடி உள்ளதாகவும் இந்த பாடல் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது

சில்புரோ என்று தொடங்கும் இந்த பாடலை இசை அமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் கம்போஸ் செய்ய அதில் தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த அட்டகாசமான பாடலை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்

 

 

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *