தனுஷின் ‘பட்டாஸ்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்: இன்ப அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் ஜனவரி 9ஆம் தேதியும், தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ திரைப்படம் ஜனவரி 16ஆம் தேதியும் வெளியாகும் என திட்டமிட்டு இருந்தது

இந்த திட்டமிடலின் படி ரஜினியின் தர்பார் திரைப்படம் நேற்று வெளியானது. இதனை அடுத்து வரும் 16ம் தேதி தனுஷின் ‘பட்டாஸ்’ திரைப்படத்தை வரவேற்க தனுஷ் ரசிகர்கள் தயாராக இருந்த நிலையில் இன்ப அதிர்ச்சியாக தற்போது ஒரு நாள் முன்னரே அந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

‘பட்டாஸ்’ படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படம் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் ஒரு நாள் முன்னரே தங்கள் அபிமான நடிகரின் படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

Leave a Reply