மெடிக்கல், இஞ்சினியரிங் வேஸ்ட், புரோட்டா மாஸ்டர் தான் பெஸ்ட்: குவியும் வேலைவாய்ப்புகள்

நீட் பயிற்சி உள்பட பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சி மையமும் அதேபோல் வங்கிப் பணித் தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு உட்பட பல்வேறு வேலைவாய்ப்பு தேர்வுகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் முதல் முறையாக புரோட்டா மாஸ்டருக்கு என ஒரு பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மதுரையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் சேர இளைஞர்கள் குவிந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் அதிக அளவில் புரோட்டா கடைகள் பெருகிக் கொண்டே வருவதை அடுத்து புரோட்டா மாஸ்டர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது

ஒரு புரோட்டா மாஸ்டருக்கு தினமும் 1000 முதல் 2000 வரை சம்பளம் கிடைப்பதால் மாதம் 50,000 வெகு எளிதாக சம்பாதித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து புரோட்டா மாஸ்டர் பணியில் சேர பலர் விருப்பப்பட்டு அதன் பயிற்சி மையத்தில் சேர்ந்து வருகின்றனர்

மெடிக்கல், இஞ்சினியரிங் என லட்சக்கணக்கில் செலவு செய்து படித்து அதன் பின்னர் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுவதை விட வெறும் ஆயிரம் ரூபாய் செலவில் புரோட்டா மாஸ்டர் பயிற்சி பெற்று மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்பதே தற்போதைய இளைஞர்களின் எண்ணமாக உள்ளது

Leave a Reply