தற்போதைய 10 வது மக்களவையின் பதவிக்காலம் வருகிறஜுன் 1 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே , மார்ச் 31 ஆம் தேதிக்குள் அடுத்த மக்களவைக்கு புதிய உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட வேண்டும். இதன் காரணமாக தேர்தல் தேதியை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பை காட்டி வருகிறது.

அனேகமாக இந்த வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என செய்திகள் வெளிவருகின்றன. ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் மே மாதம் முதல் வாரம் வரை தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த மக்களவை தேர்தல் ஐந்து கட்டங்களாக நடந்தது. ஆனால் தற்போதைய மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, அசாம் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஊழலுக்கு எதிரான மசோதாக்களை அவசர சட்டங்களாக பிறப்பிக்க மத்திய அரசு முயல்வதால், தேர்தல் தேதி அறிவிப்பு கால தாமதமாகி வருவதாக டெல்லி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

Leave a Reply