shadow

பிரான்ஸ் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். வெறித்தனமான தாக்குதல். அவசர நிலை பிரகடனம்

shadow

பிரான்ஸ் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தாக்குதல் காரணமாக இதுவரை 153 பேர் பலியாகியுள்ளதாகவும், இன்னும் ஏராளமான பொதுமக்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பிரான்ஸ் நாடு தனது எல்லைகளை மூடி, அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நேற்று பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதிய கால்பந்து போட்டி செயின்ட் .டெனிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில் திடீரென தீவிரவாதிகள் சிலர் கூட்டத்தில் புகுந்து கண்மூடித்தனமான துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஏராளமானோர் பலியாகினர். அதுமட்டுமின்றி பாரிசின் கிழக்குப் பகுதியில் உள்ள பட்டாச்சான் என்ற சினிமா ஹாலிலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இரண்டு இடங்களிலும் சேர்த்து இதுவரை 153 பேர் பலியாகியுள்ளதாகவும், இன்னும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே நாளில் அடுத்தடுத்த நடந்த துப்பாக்கி சூடு காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள பிரான்ஸ் அரசு உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தனது நாட்டு எல்லைகளை மூடியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் மனிதத்தன்மையற்றது. இரக்கமே இல்லாமல் இந்த தாக்குதலை எதிர் கொள்ள வேண்டும் என ஃப்ரான்ஸ் அதிபர் ஹோலான்டே கூறியுள்ளார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இரு இடங்களையும் நோக்கி 1500 ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர்.

Leave a Reply