கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய வருமானவரித்துறை பான்கார்டு விண்ணப்பிக்க புதிய நடைமுறைகளை கொண்டு வந்தது.

அதன்படி பான்கார்டு விண்ணப்பம் செய்பவர்கள் அவர்களுடைய அடையாளத்தை நிரூபிக்கும் ஒரிஜினல் சான்றிதழ்களை நேரில் வந்து காட்ட வேண்டும் என்றும், வருமான வரித்துறை அதிகாரிகள் அதை சரிபார்த்து திரும்ப ஒப்படைத்துவிடுவார்கள் என்றும் மேலும் பான்கார்டு விண்ணப்பக்கட்டணம் ரூ.85ல் இருந்து ரூ.105க்கு உயர்வதாகவும் தெரிவிக்கபப்ட்டிருந்தது.

ஆனால் இந்த நடைமுறைக்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இன்று வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் பான்கார்டு விண்ணப்பிக்க பழைய முறையே நடைமுறைப்படுத்தப்படும் என்றும், புதிய நடைமுறை அடுத்த அறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனால் பான்கார்டு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply