shadow

flight 1
அமெரிக்க விமானம் ஒன்று 101 பயணிகளுடன் சுமார் 38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் அவசர கதவு திடீரென திறந்த்தால் 12 நிமிடத்தில் தீடீரென 11,000 கிமீ உயரத்திற்கு கீழே தலைகீழாக கவிழ்ந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

flight 2அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சிகாகோ நகருக்கு யூனிட்டெட் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று மாலை கிளம்பியது. விமானம் சுமார் 38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் அவசர வழி கதவு திடீரென திறந்த்தால் விமானம் நிலைதடுமாறி திடீரென கீழே இறங்கியது.

flight 412 நிமிடத்தில் 38000 அடியில் இருந்து 11000 அடி வரை வந்த விமானத்தை விமானி வெகு சாமர்த்தியமாக கையாண்டு அருகில் இருந்த கன்காஸ் மாகாணத்தில் உள்ள விசிபா மிட் கான்டினென்ட் என்ற விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறங்கினர். விமானத்தின் உள்ளே இருந்த 101 பயணிகளும் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

flight 3அவசர வழிக்கதவை ஒரு பயணி தவறுதலாக திறந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த கருத்தை விமான நிறுவனம் மறுத்தது. இதுகுறித்து விசாரணை நடத்த விமானநிறுவனம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

Leave a Reply