தேவையான பொருட்கள்:

பனீர் – 10 துண்டுகள்
உருளைக்கிழங்கு – தோலுரித்து நறுக்கியது 1
பட்டாணி – 1/2 கப்
கேரட் – 1 என்னம் (தோலைநீக்கி வெட்டியது)
பட்டை – 1 அங்குலம் அளவு
கிராம்பு – 3 என்னம்
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணைய் – 2 ஸ்பூன்

அரைக்க:
அரைமூடி தேங்காய் , 3 பச்சைமிளகாய் , சோம்பு 1 டீஸ்பூன் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

• வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
• பின் அதனுடன் தக்காளி சேர்த்து பேஸ்ட் போல் வதக்கவும்.
• அதனுடன் உருளை, கேரட், பட்டாணி,பனீர் சேர்த்து வதக்கி உப்பு போடவும்.
• பின் அரைக்கவுள்ளவற்றை அரைத்து வதக்கிய கலவையில் ஊற்றி மஞ்சள் தூள்,தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வைத்து எடுக்கவும்.

சூப்பரான பனீர் உருளை மசாலா ரெடி.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *