images (4)

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கிராம்

வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)

தக்காளி – 2 (அரைத்தது)

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

பாவ் பாஜி மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன் + மாங்காய் பொடி – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சர்க்கரை – 1 டீஸ்பூன்

உலர்ந்த வெந்தயக்கீரை – 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அதில் சீரகத்தை சேர்த்து தாளிக்கவும். பின் அதில் வெங்காயம், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, வெண்ணெய் தனியாக பிரியும் வரை கிளறி விட வேண்டும். பின்பு அதில் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, குடைமிளகாய் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, உலர்ந்த வெந்தயக்கீரையை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பன்னீர் மசாலா ரெடி!!!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *