shadow

images

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

பால் – 6 டேபிள் ஸ்பூன்

க்ரீம் – 3 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு நைஸாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட்டை சேர்த்து, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு பால், தண்ணீர் மற்றும் க்ரீம் சேர்து நன்கு கொதிக்க விட்டு, பின் பன்னீர், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை, குறைந்தது 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சூப்பரான பன்னீர் கிரேவி ரெடி!!!

Leave a Reply