shadow

download (1)

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி – 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி  – 2, இஞ்சி,
பூண்டு விழுது  -3 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா தலா – 1 கைப்பிடி அளவு,
பச்சை மிளகாய் – 10,
தேங்காய் – அரை மூடி,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய், நெய் –  சிறிது,
பட்டை – 3 துண்டுகள்,
கிராம்பு –  6,
ஏலக்காய் – 6,
பிரிஞ்சி இலை – 2,
தனியா – 1 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்,
சீரகம் –  1/2 டீஸ்பூன்,
சோம்பு –  1/2 டீஸ்பூன்,
ஜாதிக்காய்  –  பாதி,
கசகசா – 1 டீஸ்பூன்,
பாதாம் – 4,
முந்திரி –  1 டீஸ்பூன்,
பனீர் – கால் கிலோ,
சிவப்பு  மற்றும் மஞ்சள் ஃபுட் கலர் – தலா 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய்யை ஊற்றி கசகசா, சோம்பு, சீரகம், மிளகு, 3 கிராம்பு, 3 ஏலக்காய், ஜாதிக்காய், பட்டை 1, தனியா, பச்சை மிளகாய், முந்திரி, பாதாம் ஆகியவற்றைப் போட்டு நன்று வறுக்கவும். அத்துடன் 1/2 கைப்பிடி அளவு கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை அரைத்து 1 1/2 டம்ளர் பால் எடுத்துக் கொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள்  ஊறவைத்து, உப்புச் சேர்த்து அரை வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை  துண்டுகளாக்கி கொள்ளவும். தக்காளிப் பழத்தை 3 துண்டுகளாக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மீதமிருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு நன்கு வெடித்ததும் வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய், மீதமிருக்கும் புதினா, கொத்த மல்லி போட்டு வதக்கவும். பின்பு அரைத்த கலவையையும் பனீர் துண்டுகளையும் அதில் கொட்டி நன்கு கொதித்ததும் இறக்கவும். கொதித்த கலவையை 3 பாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும். ஒன்றில் சிவப்பு ஃபுட் கலர், இன்னொன்றில் மஞ்சள் ஃபுட் கலர் சேர்க்கவும். இன்னொரு பாகம் பச்சையாகவே இருக்கும் என்பதால் அப்படியே வைத்திருக்கவும். மூன்றிலும் தேவையான சாதம் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, அதன் மேல் சிவப்பு கலர் சாதம் கொட்டவும். வறுத்த வெங்காயம் தூவவும். சிறிது தேங்காய்ப் பாலைத் தெளித்து அழுத்தவும். அடுத்து மஞ்சள் கலர் சாதத்தையும், பச்சை கலர் சாதத்தையும் இதே போலச் செய்யவும். தேங்காய்ப் பால் தெளித்து அழுத்தவும். அதன் மேல் சிறிது வெள்ளை சாதத்தைப் பரப்பி, மறுபடி சிறிது தேங்காய்ப் பால் தெளித்து, அழுத்தி, தம் போடவும். பாத்திரத்தை மூடி, கனமான பொருள் வைத்து குறைந்த தணலில் 10 நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கவும். பரிமாறும்போது ஒரு பக்கமாக வெட்டி பரிமாறவும். பார்க்க 3 கலர் லேயர் கிடைக்கும்.

Leave a Reply