shadow

பாண்டிராஜின் புதிய படம் குறித்த அறிவிப்பு

‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜ் தயாரிப்பில் அவரது உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கும் திரைப்படத்தின் டைட்டில் ‘செம’ என்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷூம், அவருக்கு ஜோடியாக ஆர்த்தனா என்ற மலையாள நடிகையும் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, மன்சூர் அலிகான் ஆகியோர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இயக்குனர் வள்ளிகாந்த் நண்பர் ஒருவரின் திருமணத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ போன்று இந்த படமும் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

பாண்டிராஜின் பசங்க புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply