shadow

LRG_20150813105452933056

பழனி முருகன் கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம், ஒன்றரை கோடி ரூபாய் கிடைத்துள்ளது; தங்க கைவிலங்கு ஒன்றும் உண்டியலில் இருந்தது. பழனி முருகன் கோவிலில், கடந்த, 26 நாட்களில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. 1 கோடியே, 60 லட்சம் ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், தங்கம், வெள்ளியால் ஆன பொருட்களை காணிக்கையாக செலுத்துவர். ஒரு கிலோ எடையுள்ள ஒரு ஜோடி வெள்ளி செருப்பு இருந்தது. இன்னொரு பக்தர், தங்கத்தால் செய்யப்பட்ட கைவிலங்கு செலுத்தியிருந்தார். மேலும் வெள்ளியால் செய்யப்பட்ட வேல்கள், பரிவட்டம், வாட்ச் போன்றவையும் உண்டியல்களில் இருந்தன.

Leave a Reply