shadow

potato_2328290f

என்னென்ன தேவை?

இளசான பசலைக்கீரை – 1 கட்டு

உருளைக்கிழங்கு – 2

வெங்காயம், தக்காளி – 1

பூண்டு – 4 பல்

சீரகம் – கால் டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – டீஸ்பூன்

ஃப்ரெஷ் கிரீம் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் – 1 சிட்டிகை

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கைத் தோல் சீவி, சதுரமாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உருளைக் கிழங்கை வதக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து மூடிவிட்டு அவ்வப்போது கிளறிவிடவும். கிழங்கு பொன்னிறமாக வெந்ததும் இறக்கி வைக்கவும் .

கீரையை நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் போட்டுத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் தக்காளியைச் சேர்க்கவும். நறுக்கிய கீரையைச் சேர்த்துக் கிளறவும். தக்காளி, வெங்காயத்துடன் கீரையும் நன்கு சேர்ந்து கலக்கும்போது மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த் தூள் ஆகிவற்றைச் சேர்த்துக் கிளறி, சிறிது நீர் தெளித்து மூடி வைக்கவும். சில நிமிடங்களில் கீரை வெந்து விடும். வதக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கலக்கவும். கீரை மசாலா கிழங்கில் நன்கு கலந்ததும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து, சில நிமிடம் சிம்மில் வைத்து பிறகு இறக்கவும் .

பூரி, சப்பாத்தி இவைகளுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும். கீரையுடன் உருளைக்கிழங்கும் இருப்பதால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Leave a Reply