shadow

18-spinachchicken

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்

பசலைக்கீரை – 500 கிராம் (சுத்தம் செய்து வேக வைத்தது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

வெங்காயம் – 2

தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3-4

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மல்லி தூள் – 1 டீஸ்பூன்

சர்க்கரை – 1 சிட்டிகை

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பிரியாணி இலை – 1

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பிரஷ் க்ரீம் – 1 டீஸ்பூன் (அலங்கரிக்க)

செய்முறை:

முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் தடவி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வேக வைத்துள்ள பசலைக்கீரை மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெங்காயத்தை அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள பசலைக்கீரை பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட்டு, பின் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து 20-25 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் தயிர் மற்றம் சர்க்கரை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைக்கவும் பின் உப்பு, மல்லி தூள் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, க்ரீமை மேலே தூவி அலங்கரித்தால், சுவையான பசலைக்கீரை சிக்கன் கிரேவி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Leave a Reply