shadow

வான் அத்துமீறல். அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை
pakistan
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணகர்த்தவான பின்லேடன் பாகிஸ்தானில் மறைந்திருந்த நேரத்தில் பாகிஸ்தானின் அனுமதியின்றி அந்நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்து அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீஃப்,  அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் தனது எச்சரிக்கையில், ‘பாகிஸ்தானின் இறையாண்மையைக் குலைக்கும் வகையில் அதன் வான் எல்லைக்குள் நுழைந்து அமெரிக்கா நிகழ்த்தியது போன்ற ஆளில்லா விமானத் தாக்குதல்கள்தான் எதிர் காலத்தில் அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை நிர்ணயிக்கும் காரணியாக அமையப்போகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply