shadow

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இங்கிலாந்து அபார வெற்றி

cricket2இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று முடிவடைந்த 2வது டெஸ்ட் போட்டியில் 330 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 589 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. கேப்டன் குக் 105 ரன்களும் ரூட் 254 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. ஆயினும் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் டிக்ளேர் செய்தது.

564 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்ததால் 330 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக ரூட் தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply