shadow

உலகின் முதல் சூரிய சக்தி பாராளுமன்றம். பாகிஸ்தானுக்கு கிடைத்த பெருமை
pakistan
உலகிலேயே முதன்முதலாக முழுக்க முழுக்க சூரிய ஒளியில் செயல்படும் நாடாளுமன்றம் என்ற பெருமையை பாகிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடம் பெற்றுள்ளது. இதற்கான இந்தியுதவி ரூ.377 கோடியை அண்டை நாடான சீனா அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க சூரிய ஒளியில் செயல்படும் இந்த நாடாளுமன்ற வளாகத்தை நேற்று அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் திறந்து வைத்தார். 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் இரண்டே ஆண்டுகளில் நிறைவேறி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த வளாகத்தை திறந்து வைத்த பின்னர் பேசிய நவாஸ் ஷெரீப், ‘விடுதலைக்கு பின்னர் நாடாளுமன்ற வளாகம் மின் தேவையில் சூரிய சக்தி மூலம் தன்னிறைவு அடைந்திருப்பது இதுவே முதல் முறை. தனியார், பொது உள்ளிட்ட பிற நிறுவனங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும். இத்திட்டம் சீனா-பாகிஸ் தானின் நட்புக்கு மற்றுமொரு உதாரணம்’ என்று கூறினார்.

மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்ற பேரவைத் தலைவர் ஆயாஸ் சாதிக் கூறும்போது, “இந்த சூரிய சக்தி தகடுகள் 80 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். நாடாளுமன்ற வளாகத்துக்கு 62 மெகாவாட் போதுமானது. எஞ்சிய 18 மெகாவாட் தேசிய வலையமைவுக்கு அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் உள்பட ஒருசில நாடுகளின் நாடாளுமன்றங்களின் ஒருசில பகுதி மட்டும் சூரிய சக்தியில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply