shadow

டிரம்ப் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் பதிலடி

அமெரிக்காவும் பாகிஸ்தானும் ஒருகாலத்தில் நட்பு நாடாக இருந்தது. ஆனால் பின்லேடன் பாகிஸ்தானில் பிடிபட்டதில் இருந்து பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் பதிவு செய்த ஒரு டுவீட்டில் அமெரிக்கா எப்படி பாகிஸ்தானுக்கு நட்புடன் செயல்பட்டது என்றும், அதற்கு பாகிஸ்தான் எப்படி முரணாக நடந்தகொண்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாகிஸ்தான் தற்போது பதில் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபரின் இந்த டுவீட்டுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது: `அமெரிக்க அதிபர் டொனால்ட் டர்ம்ப்பின் ட்வீட்டுக்கு நாங்கள் விரைவில் எதிர்வினையாற்றுவோம். உலகுக்கு எது உண்மை என்பதை நாங்கள் எடுத்துக் கூறுவோம். உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தை கண்டிப்பாக புரியவைப்போம்’ என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply