shadow

பாகிஸ்தானின் மால்வேர்களால் இந்தியாவுக்கு ஆபத்து. மைக்ரோசாப்ட் தகவல்

malwareபாகிஸ்தான் உளவு ஏஜென்ஸியான ஐ.எஸ்.ஐ. இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை திருடுவதற்காக சில மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்கி இணையத்தில் உலவ விட்டிருப்பதாகவும் இந்த மால்வேர்கள் இந்திய அரசின் ராணுவ இணையதளங்கள் உள்பட முக்கிய இணையதளங்களையும், பிரபலங்களின் இணையதளங்களையும் முடக்கி இந்தியாவுக்கு எதிரான வாசகங்களோடு பாகிஸ்தான் கொடியுடன் போஸ்ட் செய்து வருவதாகவும் மைக்ரோசாப்ட் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகள் அதிக அளவில் மால்வேர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செக்யூரிட்டி இண்டலிஜென்ஸ் பிரிவு உறுதி செய்துள்ளது. உலகில் உள்ள மால்வேர் தாக்குதல்களில் 50% ஆசிய நாடுகளில் இருந்தே தொடுக்கப்படுவதாகவும், 5-ல் ஒரு பகுதி மட்டுமே லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து பரப்பப்படுவதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் தனது ஆன்டி-மால்வேர் சாப்ட்வேரில் உள்ள சென்சார்களின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு கோடி மால்வேர் தாக்குதல்களை உலகமெங்கும் கண்டறிந்து வருவதாக கூறிய மைக்ரோசாப்ட், ஜப்பான், பின்லாந்து, நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் மால்வேர் தாக்குதல்கள் குறைவாகவே காணப்படுவதாக கூறியுள்ளது.

Leave a Reply