shadow

அரசியலுக்கு முழுக்கா? பர்வேஸ் முஷரப் வீடியோவால் பரபரப்பு

பாகிஸ்தானில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் அரசியலை விட்டு விலகப்போவதாக சூசகமாக தெரிவித்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட திட்டமிட்டேன். ஆனால் பாகிஸ்தானுக்கு திரும்பி வந்தால் கைது செய்யமாட்டோம், வாழ்நாள் தகுதிநீக்க உத்தரவை விலக்கிக்கொள்வோம், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து (முஷரப்) பெயர் நீக்கப்படும் என்பதுபோன்ற வாக்குறுதிகளை விரும்பினேன்.

கவாஜா ஆசிப்பின் வாழ்நாள் தகுதி நீக்க உத்தரவு ரத்தாகிறபோது, எனக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் ரத்து செய்யக்கூடாது? நவாஸ் ஷெரீப் நாட்டை விட்டு செல்லலாம், திரும்ப வரலாம் என்று இருக்கிறபோது எனக்கு அந்த உரிமை கிடையாதா?நான் விரும்பிய வாக்குறுதிகள் அளிக்கப்படவில்லை. எனது கட்சிக்காக நான் எதுவும் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். எனவே கட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்து விட்டு நாட்டுக்கு திரும்புவதில்லை என்று முடிவு எடுத்தேன்.

சட்டப்பிரச்சினைகளால்தான் இந்த முடிவை எடுத்தேன். நான் தொடங்கிய கட்சியை ஆதரிப்பேன். எதிர்கால நடவடிக்கை குறித்து பின்னர் நிலைமையைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.

Leave a Reply