Tamil_News_thumb_1433435

இஸ்லாமாபாத்: நாளை (ஜன.15)ல் நாளை நடப்பதாக இருந்த இந்தியா – பாக், இடையிலான பேச்சு மறுதேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக பாக்., வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார் , மசூத் அசார் குறித்து எழுப்பிய கேள்விக்கு இது போன்ற கைது ஏதுமில்லை என்றார்.

பதன்கோட் விமான தளம் மீது தாக்குதல் நடத்தியதில் பாக். பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதால் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் இரு நாட்டு பேச்சுக்கு நல்லது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சு ஜன.15ல் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது .

இன்று பாக். வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், நிருபர்களிடம் பேசுகையில்; நாளை பேச்சு நடக்க வாய்ப்பு இல்லை. மீண்டும் எந்நாளில் இந்த பேச்சு நடக்கும் என்பதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் இரு நாடுகளும் தொடர்பில் தான் இருக்கிறோம். பயங்கரவாதம் என்பது எல்லோருக்கும் பொது எதிரி தான் எனவே அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் எங்களின் ஒத்துழைப்பு உண்டு .

மசூத் அசார் கைது குறித்து இது வரை எந்த எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றார் .

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *