shadow

பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை

Ready for Valentine's Day roses for export merchantsபிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட காதலர்கள், தம்பதியர்கள் உள்பட அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் பாகிஸ்தான் நாட்டில் மட்டும் காதலர் தினத்திற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் கொண்டாட்டம் நடைபெறும்போது அந்த கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பினர் காதலர் தினம் கொண்டாடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இது சம்பந்தமாக உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான கோப்பு உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி உத்தரவு பிறப்பித்து அவர்கள் மூலம் தடை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply