shadow

பயங்கரவாதிகளின் பாதுகாப்பிடம் தான் பாகிஸ்தான். அமெரிக்கா


பயங்கரவாதிகளின் வாழ்விடமாக பாகிஸ்தான் இருப்பதாக அமெரிக்கா தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டுக்கான பயங்கரவாத தொடர்பான ஆய்வறிக்கையை காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க பார்லிமெண்டில் தாக்கல் செய்தது. அதில், லஷ்கர் இ தொய்பா, ஜெயிஷ் –இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தான் நாட்டிலிருந்து தான் உருவாகின்றன. இந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் இந்தியாவிற்கு எதிரான பதான்கோட் தாக்குதல் உள்பட அனைத்து நாசவேலைகளையும் செய்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் செயல்படும் தலிபான்கள், ஹக்கானி நெட் ஒர்க், லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளும் பாகிஸ்தான் மண்ணில் இருந்து தான் உருவாகின்றன. அப்படி உருவாகும் தீவிரவாதிகளை அழிக்க பாகிஸ்தான் தொடர்ந்து தயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் ஹபீஸ் சையத்தின் ஜமாத் உத் தவா என்ற அமைப்பை மட்டும் சேர்க்க பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்ததன் மூலமாக தீவிரவாதிகளின் வாழ்விடமாக பாகிஸ்தான் உள்ளது என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply