shadow

தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை. பாகிஸ்தான் அரசு ஒப்புதல்

indian channels restricted in pakistanமுஸ்லீம் நாடான பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களாக வாழ்ந்து வரும் இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளான தீபாவளி ஈஸ்டர், ஹோலி உள்பட சில பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் தற்போத் இதுகுறித்த தீர்மானம் ஒன்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹோலி, தீபாவளி, ஈஸ்டர் ஆகிய பண்டிகைகளுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்து மதத்தை சேர்ந்த எம்.பியான ரமேஷ் குமார் வன்க்வானி இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் குறித்து பேசிய பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய மத விவகாரங்களுக்கான இணை அமைச்சர் பீர் அமினுல் ஹஸ்னத்,  சிறுபான்மையினருக்கு அவர்களின் பண்டிகைகளின்போது விடுமுறை அளிப்பதற்கு அரசு நிறுவனங்களின் தலைமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது என்றும் கூறினார். மேலும்  தகவல் தொடர்புத்துறை மந்திரி பர்வாய்ஸ் ரஷித் பேசியபோது, ‘சிறுபான்மை மக்களின் மத பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்க அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறினார்.

ரமேஷ்குமாரின் இந்த தீர்மானத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும் இனிவரும் தீபாவளி, ஹோலி மற்றும் ஈஸ்டர் பண்டிகை நாட்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

Leave a Reply