புதுடெல்லி:  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜ எம்.பி. சோலங்கிக்கு டெல்லி நீதிமன்றம் 2நாள் சிபிஐ காவல் அளித்துள்ளது.பீகாரில் கடந்த 2010ம் ஆண்டு ஜூலையில் தகவல் உரிமை ஆர்வலர் அமித் பிகாபாய் ஜெத்வாவை  ஒரு கும்பல் சுட்டுக் கொன்றது. இது தொடர்பாக குஜராத்தில் உள்ள ஜுனாகாத் மக்களவை தொகுதி பாஜ எம்.பி.யான தினுபாய் போகாபாய் சோலங்கியை சிபிஐ நேற்று முன்தினம் மாலை டெல்லியில் கைது செய்தது. நேற்று காலை அவரை டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தியது. அப்போது தாக்கல் செய்த மனுவில், ‘குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே, அந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சோலங்கியை அழைத்து செல்ல வேண்டியிருப்பதால், அவருக்கு 2 நாள் சிபிஐ காவல் அளிக்க வேண்டும்’ என்று கோரியது. இதை ஏற்ற நீதிபதி, அவருக்கு 2 நாள் சிபிஐ காவல் அளித்தார்.

Leave a Reply