shadow

‘கபாலி’க்கு எதிர்மறை விமர்சனம் எழுதுபவர்கள் யார்? ஒரு அதிர்ச்சி தகவல்

kabaliiபொதுவாக ஒரு திரைப்படம் வெளியானவுடன் ஒருசில டுவிட்டர் பயனாளிகள் மொக்கை படத்தை கூட போட்டி போட்டு கொண்டு நல்ல படம், விறுவிறுப்பான படம், என பில்டப் செய்வது வழக்கம். அவர்களுக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் இருப்பதால் அந்த படம் நல்ல புரமோஷனை பெறும். இதற்காக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஒருசில குறிப்பிட்ட டுவிட்டர்வாசிகளுக்கு வெயிட்டான கவர் கொடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் இந்த டுவிட்டர்வாசிகளை கவனிக்கவில்லையாம். இதனால் மொக்கை படத்தை கூட பில்டப் செய்யும் பெய்டு டுவிட்டர்வாசிகள் தற்போது ‘கபாலி’க்கு எதிர்மறை விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும் நடுநிலை விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக ‘கபாலி’ படத்தின் வசூல் குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ரஜினி படம் என்றால் குடும்பத்துடன் பார்த்துவிடுவது தமிழக மக்களின் வழக்கமாக கடந்த பல வருடங்களாக இருந்து வருவதால் இந்த பெய்டு டுவிட்டர்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றே கருதப்படுகிறது.

Leave a Reply