அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் ஜூன் 8ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கேரளாவில் மட்டும் அம்மாநிலத்தில் உள்ள கோவில்களை திறக்க விசுவ இந்து பரிஷத் என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குறிப்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை திறக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து வரும் 30ஆம் தேதி வரை பத்மநாபன் சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவில் உள்ள பல கோயில்கள் தரப்பட்டாலும் முக்கிய கோவிலான பத்மநாப சுவாமி கோவில் திறக்காமல் இருப்பது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இருப்பினும் ஜூன் 30ஆம் தேதிக்கு பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply