இணையத்தில் பத்ம விருது பெற்றவர்களின் விபரங்கள். மத்திய அரசு ஏற்பாடு

padma-awardsஇந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகள் ஒவ்வொரு துறையிலும் சாதனை செய்தவர்களுக்கு வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் கடந்த 1954ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த விருது பெற்றவர்களின் முழு பட்டியலையும் இணையத்தில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி www.padmaawards.gov.in:8888 என்ற இணையதளத்தில் பத்ம விருது பெற்றவர்களின் முழுவிவரங்கள், பகுப்பாய்வுகள் அடங்கிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அனைத்து பத்ம விருதுகள், யாருக்கு என்ன விருது வழங்கப் பட்டது, ஆண்டு, எந்த மாநிலம், எந்த துறை போன்ற விவரங்கள் இந்த இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,400 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரின் விவரங்களும் எளிதில் பார்க்கும்படி இணையதளத்தில் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

பத்ம விருது பரிந்துரைகளை பொதுமக்கள் மேற்கொள்ளும் வசதியை மத்திய அரசு ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளையும் இந்த இணையதள முகவரி மூலமே மேற்கொள்ளலாம். நடப்பாண்டுக்கு பரிந்துரை செய்ய நாளை இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *