shadow

LRG_20150728103208846343

தர்மராஜா கோவில் வீதி, தேவி படவேட்டம்மன் கோவிலில், ஆக., 14ம் தேதி, படவேட்டம்மன் பச்சைக்கரக ஊர்வலம் நடக்கிறது.ஆடி திருவிழா ஏற்பாடுகள் குறித்து, கோவில் நிறுவனர் மோகன் கூறியதாவது:இக்கோவிலில், ஆடி மகா உற்சவம் நடந்து வருகிறது. கடந்த, 24ம் தேதி, காலை, கலச ஸ்தாபனம், அம்மன் உற்சவ கொடியேற்றம், இரவில் காப்பு கட்டப்பட்டது.வரும், 31 மற்றும் ஆக., 7ம் தேதி மாலை, அம்மனுக்கு அபிஷேகம், ஹோமம், சிறப்பு அலங்காரம், பூஜகைள் நடக்கஉள்ளன. ஆக., 12ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வாண வேடிக்கை, பேண்டு வாத்தியத்துடன் அம்மனின் பல்லக்கு ஊர்வலம், ஆக., 13ம் தேதி, மாலை, மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஆக., 14ம் தேதி, ஆடி அமாவாசையன்று காலை, அபிஷேகம், பகலில் அன்னதானம், இரவில் தேவி படவேட்டம்மன் பச்சைக்கரக ஊர்வலம், 10:00 மணிக்கு கும்ப பூஜை நடக்கிறது. ஆக., 15ம் தேதி காலை, அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மாவிளக்கு பூஜை, மாலையில் ராமகிருஷ்ணன் சிவ பக்தி பாடல் பாடப்படுகிறது. ஆக., 16ம் தேதி மாலை, சாந்தி அபிஷேகம், மகாலட்சுமி பூஜையை தொடர்ந்து, திருமாங்கல்ய பூஜை நடக்கிறது. இரவில் வசந்த உற்சவம் நடக்கஉள்ளது. தேவி படவேட்டம்மன் கோவிலில், நவகிரக பிரதிஸ்தாபனம் நடக்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 99868 52239 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.கோவில் நிறுவனர் மோகன், ஷீலா தேவி மற்றும் டிரஸ்டிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Leave a Reply