ரியோ ஒலிம்பிக். இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளி வென்றார்.

sindhu silverரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பி.வி.சிந்து 1-2 என்ற கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை மரின் கரோலினாவிடம் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கம் பெற்றார். இருப்பினும் இந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் வெள்ளி வென்று இந்தியவுக்கு பெருமை சேர்த்து சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் சிந்து வெற்றி பெற்றதால் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படது. ஆனால் மரின் கரோலினா அடுத்த இரண்டு செட்டுக்களில் சுதாரிப்பாக ஆடி 12-21 மற்றும்15-21 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். முதல் தங்கப் பதக்கம் வென்ற ஐரோப்பிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில் வெள்ளி வென்ற சிந்துவுக்கு பிரதமர் மோடி உள்பட கோடிக்கணக்கானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *