shadow

India's Finance Minister Palaniappan Chidambaram speaks during an interview with Reuters in Washingtonமாநில கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியை பிடிக்க ப.சிதம்பரம் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த ஒரு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் பேசும்போது, “வேட்டி கட்டிய தமிழன் தான் அடுத்த பிரதமர்” என்று பேசினார். அவருடைய கனவு நனவாகும் நிலை தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம், ‘இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், தேர்தல் முடிவுக்கு எதுவும் நடக்கலாம் என்றும் அவர் சூட்சகமாக தெரிவித்தார். தேர்தல் முடிவு வந்த பிறகு எனது பேட்டிக்காக நீங்களே கூட அப்பாயின்மெண்ட் கேட்டுக் காத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா மற்றும் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க முடியாமல் போனால், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையலாம் என்றும், அப்படி ஒரு கூட்டணி ஆட்சிக்கு தலைமை தாங்க ராகுல்காந்தி விரும்பமாட்டார் என்றும், அந்த நிலையில் பிரதமர் வேட்பாளராக ப.சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதற்காக இப்பொழுதே வடமாநில மாநிலக்கட்சிகளுடன் ப.சிதம்பரம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தேர்தலில் தோல்வி அடைந்தால் பிரதமராகும் வாய்ப்பை இழக்க நேரிடலாம் என்பதாலேயே அவர் தேர்தலில் போட்டி யிடாமல் ஒதுங்கிக் கொண்டதாகவும், தேர்தல் முடிவுக்கு பின்னர், மகாராஷ்டிரம் அல்லது கர்நாடக மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி. ஆவதற்கு முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. சிவகங்கை பக்கம் உள்ள அவரது ஆதரவாளர்களோ, ‘‘எங்கள் தலைவருக்கு ராசியான எண் 16. அந்தத் தேதியில் தேர்தல் முடிவுகள் வெளிவருவதால் நினைத்தது நடக்கும் என்று பேசிக்கொள்கிறார்களாம்..

Leave a Reply