shadow

9தேர்தலில் தோற்றுவிடுவேன் என்ற பயம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. தமிழக மக்களுக்கு சமூக பணியாற்றவே தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார்.

நேற்று ப.சிதம்பரம் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசியபோது, 30 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்து பணியாற்றியது போதும் என்றும், நான் பிறந்த தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் இனி என்னுடைய சேவை சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி, சமூக பணியாற்ற விரும்புகிறேன் என்றும் கூறிய ப.சிதம்பரம், அரசியலில் இருந்து விலகும் முடிவையும் எடுத்துவிட்டதாக தெரிவித்தார்.

தம்முடைய வாழ்வில் தான் எத்தனையோ தேர்தலையும் சந்தித்திருப்பதாகவும், தேர்தலை கண்டு அஞ்சுவதற்கு தான் ஒன்றும் கோழையில்லை என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் தனக்கு பதிலாக தன்னுடைய மகன் கார்த்திக் சிதம்பரத்தை பொதுமக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், நான் ஆற்றிய பணியை அவர் நல்லபடியாக தொடர்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Leave a Reply