பீலா ராஜேஷுக்கு ப சிதம்பரம் பாராட்டு: பின்னணி என்ன?

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை செய்தியாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்

குறிப்பாக செய்தியாளர்களின் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு கூட லாவகமாக பதில் அளித்து அனைவரையும் அசத்தி வருகிறார்

இந்த நிலையில் பீலா ராஜேஷின் செய்தியாளர் சந்திப்பு குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் பாராட்டி உள்ளார்

ஆனால் ஒரு சில நெட்டிசன்கள் பீலா ராஜேஷ் அவர்களின் தந்தை முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராணி வெங்கடேசனின் மகள் என்றும் அதனால்தான் ப.சிதம்பரம் அவரை பாராட்டுவதாகவும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ‘அறம்’ படத்தில் வரும் நயன்தாரா போல் பீலா ராஜேஷ் மக்களுக்காக சேவை செய்வதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply