Chennai Today News

ஓவியாவின் ‘களவாணி 2’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

ஓவியாவின் ‘களவாணி 2’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

பிக்பாஸ் புகழ் ஓவியா தற்போது ‘களவாணி 2’, காஞ்சனா 3, மற்றும் சிம்புவுடன் ஒரு படம் என பிசியாக உள்ளார். இந்த நிலையில் அவர் விமலுடன் நடித்து வரும் ‘களவாணி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நேற்று நடிகர் மாதவன் தனது டுவிட்டரில் வெளியிட்டார்.

அட்டகாசமாக உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியான சில நிமிடங்களில் இணையதளங்களில் வைரலானது. ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சற்குணம் இயக்கி வருகிறார்

இந்த படமும் கிராமிய மணத்துடன் கூடிய ஒரு ஜாலியான படம் என்றும், இந்த படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!