11 ஆஸ்கார் விருதுகளுக்கு தேர்வான திரைப்படம்: ஒரு ஆச்சரிய தகவல்

இந்த ஆண்டு வழங்கப்படவுள்ள ஆஸ்கார் விருதுகள் பட்டியலில் 11 விருதுகளுக்கு ‘ஜோக்கர்’ படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜோக்கர் படத்த்ஹில் நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ் மற்றும் ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தில் நடித்த லியோனார்டோ டிகாப்ரியோ ஆகியோர் சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், தி ஐரிஷ் மேன், 1917 ஆகிய படங்கள் 4 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேரேஜ் ஸ்டோரி என்ற படத்திற்காக ஸ்கார்லெட் ஜான்சன் சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை பட்டியலில் உள்ளனர். 92-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட ‘ஒத்த செருப்பு’ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply