shadow

Oru Kanniyum Moonu Kalavaniyum Movie Stills (10)

தொழிலதிபர் அஷ்ரிதா ஷெட்டியை காதலிக்கிறார் ஹீரோ அருள்நிதி. ஆனால் அஷ்ரிதாவின் தந்தை மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அஷ்ரிதாவின் தந்தைக்கு போட்டியாக தொழில் நடத்தும் நாசர், அஷ்ரிதாவை கடத்த ஹீரோ அருள்நிதிக்கு ஆலோசனையும் கொடுத்து, அப்படி கடத்தினால் ரூ.,30 லட்சம் பணமும் தருவதாக கூறுகிறார். காதலியை கடத்த பணமா? என்று சந்தொஷத்துடன் நண்பர்கள் பிந்துமாதவி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் பகவதி பெருமாள் கூட்டணியுடன் களம் இறங்குகிறார். காதலியை கடத்தினாரா? காதல் ஜெயித்ததா? என்பது கதை என்று எல்லோரும் நினைப்பீர்கள். அதுதான் இல்லை. அந்த கடத்தலை ஒரு நிமிடத்திற்கு முன்பு கடத்தினால் என்ன நடந்திருக்கும், ஒரு நிமிடம் கழித்து கடத்தினால் என்ன நடந்திருக்கும் என்றும் மூன்று விதமாக கதை சொல்லியிருக்கிறார் சிம்புதேவன்.

12B படத்தில் ஒரு நிமிடத்தில் பஸ்ஸை கோட்டைவிட்டதால் ஷ்யாம் வாழ்வில் என்ன மாற்றம் நடந்தது என்பதை இரண்டுவிதமாக இயக்குனர் ஜிவா மிக அற்புதமாக சொல்லியிருப்பார். அதையே சிம்புதேவன் முன்றுவிதமாக கூறுகிறார். 12Bயின் பாதிப்பு பல இடங்களில்தெரிந்தாலும், ரசிக்கும்படி படத்தை முடித்துள்ளார் என்பதற்கு சிம்புதேவனை பாராட்டலாம்.

உதயநிதி ஸ்டாலின் மாதிரியே தனக்கு என்ன வருமோ அதற்கு தகுந்தாற்போல் கேரக்டர் செலக்ட் செய்து நடிக்கிறார் என்பதற்காக அருள்நிதியை பாராட்டலாம். ஆக்ஷன் காட்சிகள், ஆக்ரோஷ காட்சிகள் எல்லாம் நன்றாக நடிக்கும் அருள்நிதிக்கு ரொமான்ஸ் சுட்டுப்போட்டாலும் வராது போல் தெரிகிறது. இந்த குறையை பலரும் மெளனகுரு படத்திலேயே அவரிடம் சொல்லியிருந்தார்கள்.

அஷ்ரிதா ஷெட்டி கோடீஸ்வர தொழிலதிபருக்குரிய அம்சம் எல்லாம் கச்சிதமாக பொருந்துகிறது. அதிகவேலை இவருக்கு இல்லையென்றாலும், வரும் காட்சிகள் இவருடைய நடிப்பு இதம்.

பிந்துமாதவியா இது என்று சொல்லும்படி அருமையான நடிப்பு. இவரை ஏன் இன்னும் முன்னணி  இயக்குனர்கள் பயன்படுத்தவில்லை என்றே தெரியவில்லை.

பகவதி பெருமாள் நடிப்புக்கு அவர் முழி ஒன்றே போதும். கண்களாலேயெ பல வித்தைகள் காட்டுகிறார்.  நாசரை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம் இயக்குனர்.

இம்சை அரசன், அறை எண் 305 போன்ற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம் எடுத்திருப்பது ப்ளஸ் பாயிண்ட். ஆனாலும் 12B சாயலை தவிர்த்திருக்கலாம். நடராஜன் சங்கரன் என்பவர் இசையாம். சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை.

இந்த படத்தை அடுத்து இளைய தளபதியை இயக்கப்போகிறாராம் சிம்புதேவன். வாழ்த்துக்கள்.

Leave a Reply