shadow

போயஸ் கார்டனில் ஓபிஎஸ்-சசிகலா சந்திப்பு. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதல்வர் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வமும், அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் இன்று போயஸ் கார்டனில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை சந்தித்தார். இருவரும் இணைந்து அதிமுகவின் புதிய பொறுப்பாளர்களை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி புதிய பொறுப்பாளர்களின் பட்டியலை பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ளார்.

சசிகலா வெளியிட்ட பட்டியலின் விபரங்கள்:

1. கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.ஆக உள்ள செங்கோட்டையன், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. சென்னை மேயராக பதவி வகித்த சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர்கள் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

3. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் இலக்கிய இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply