பிரபல நடிகை நயன்தாரா வீடு ஜப்தி? கோலிவுட் அதிர்ச்சி.

nayanthara

நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயராம் வீடுகள் உள்பட பல வீடுகள் சொத்து வரி கட்டாத காரணத்தால் ஜப்தி நடவடிக்கைக்கு ஆளாகவுள்ள நிலைமை இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் சுற்றுலா நகரங்களில் ஒன்றாக விளங்கும் ஊட்டியில் சினிமா நட்சத்திரங்கள் பங்களாக்கள் வாங்கி வைத்துள்ளனர். கோடை விடுமுறை மற்றும் ஓய்வு நாட்களில் மட்டும் தங்குவதற்காக வாங்கி வைத்துள்ள இந்த வீடுகளை ஆட்களை வைத்து அவர்கள் பராமரித்து வந்தாலும், முறையான சொத்து வரி மற்றும் குடிநீர் வரியை பல சினிமா நட்சத்திரங்கள் ஒழுங்காக கட்டுவதில்லை.

சமீபத்தில் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி கட்டாத வீடுகள் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் ஊட்டி நகராட்சி அதிகாரிகள் நடிகை நயன்தாரா, மற்றும் நடிகர் ஜெயராம் ஆகியோர்களுக்கு சொந்தமான வீடுகளும் சொத்து வரி பாக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் அவர்கள் வீட்டில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியுள்ள அதிகாரிகள் தேவைப்பட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *