இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலும், ஜனாதிபதிக்கு ஆடம்பர மாளிகைகளும், சொகுசு கார்களும் அரசு செலவில் வழங்கப்படும். ஆனால் இவை எதுவுமின்றி தனது மனைவிக்கு சொந்தமான சிறிய பண்ணைவீட்டில் இருந்துகொண்டு ஒரு நாட்டுக்கு ஜனாதிபதியாக பணிபுரிகிறார் ஒருவர். அவர்தான் உருகுவே நாட்டு ஜனாதிபதி ஜோஸ் முஜிகா.

77 வயதான ஜோஸ் முஜிகா, கடந்த 2010ஆம் ஜனாதிபதியாக பதவியேற்றார். 1987முதல் இவரிடம் உள்ள ஒரே சொத்து இவருடைய வோக்ஸ் வேகன் கார் மட்டுமே. இதன் மதிப்பு $1800. இவர் தனக்கு வரும் சம்பளத்தின் 90% பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டு, மீதியுள்ள பணத்தை தன்னுடைய குடும்ப செலவுக்கு வைத்துக்கொள்வாராம்.

இவர் தனது மனைவிக்கு சொந்தமான எளிமையான பண்ணைவீடு ஒன்றில்தான் வாழ்கிறார். இவரது வீட்டிற்கு இரண்டு காவலர்கள் மட்டுமே உள்ளனர். தன்னை ஏழை ஜனாதிபதி என்று சொல்வதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தன்னை பொருத்தவரையில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அலைபவர்கள்தான் ஏழைகள் என்றும், இருப்பதை வைத்து மனநிறைவுடன் வாழ்பவர்களே பணக்காரர்கள் என்றும் கூறியுள்ளார். வரும் 2014ஆம் ஆண்டுடன் இவரது பதவிக்காலம் முடிகிறது. அதன்பின்னர் மனைவியுடன் சேர்ந்து தனது பண்ணைவீட்டில் மலர்த்தோட்டம் அமைக்க இருப்பதாக கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *