ஓலா ஊழியர்களின் நூதன போராட்டம்

இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தினக்கூலிகள் மற்றும் அன்றாடம் வேலை செய்து சம்பளம் வாங்குபவர்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர்

குறிப்பாக ஓலா, உபேர் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர்களின் நிலைமை பெரும் சிக்கலில் உள்ளது. கடந்த ஒரு மாதமாக அவர்கள் வேலைக்கு போகாததால் வீட்டில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஓலா, உபேர் டிரைவர்கள் சங்கம் ஆன்லைனில் நூதனமான போராட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளனர்

காலிப் பானையை கையில் வைத்து செல்பி எடுத்து அதனை ஆன்லைனில் பதிவு செய்து போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

வீட்டிலிருந்தே நடக்கும் இந்த போராட்டம் அரசின் காதுக்கு எட்ட வேண்டும் என்றும் இந்த போராட்டத்தின் மூலம் தாங்கள் மிகவும் கஷ்டப்படுவதை புரிந்துகொண்டு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் ஓலா, உபேர் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply