வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்ய வேண்டுமா? அனுமதி வாங்க ஆன்லைன் வசதி

சென்னை வடபழனியில் ஒவ்வொரு முகூர்த்த நாளிலும் பல திருமணங்கள் நடந்து வரும் நிலையில் இனிமேல் ஆன்லைன் மூலம் திருமணத்திற்கு அனுமதி பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை வடபழனி கோவிலுக்குள் நடக்கும் அனைத்து திருமணங்களும், இடைத்தரகர்கள் ஏற்பாட்டில் தான் நடந்து கொண்டிருகின்றது. இடைத்தரகர்கள் குறித்து, கோவில் நிர்வாகம் பல முறை, காவல் துறையிடம் புகார் அளித்தும், அரசியல் தலையீடு காரணமாக, கோவில் நிர்வாகத்தால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் இனி இடைத்தரகர்களின் அராஜகத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், ஆன்லைன் மூலம் திருமணத்திற்கு முன்பதிவு செய்யும் முறையை, அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இனி, திருமணங்கள் அனைத்தும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தான் நடைபெறும் என்றும், இதற்காக வடபழனி கோவிலின் அதிகாரபூர்வ இணையதளத்தில், 60 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *