ஆர்டர் எடுக்கும் அமேசான் பிளிப்கார்ட்

இந்தியா முழுவதும் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் மட்டும் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் தற்போது ஆர்டர் எடுத்து வருகிறது.

இதுவரை அத்தியாவசிய பொருட்களை மட்டுமே ஆர்டர் எடுத்த இந்த ஆன்லைன் நிறுவனங்கள் இனி இந்த இரு மண்டலங்களிலும் அனைத்து பொருட்களையும் ஆர்டர் எடுத்து வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த ஏப்ரல் மாதம் முழுக்க ஆன்லைன் மூலம் ஒரு போன் கூட விற்பனை செய்யப்படவில்லை என்பதால் இந்த மாதம் அதிகமாக போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply