shadow

அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் மேலும் ஒரு பிரபல வில்லன்

அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகர் வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மகாபாரதம் தொடரில் பீஷ்மராக நடித்த ஆரவ் செளத்ரிதான் இந்த படத்தின் இன்னொரு வில்லன். இவருடைய ஸ்டில் தற்போது இணையதளத்தில் வெளிவந்து டிரெண்டாகி வருகிறது.

மேலும் ஆரவ் தனது டுவிட்டரில் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் தற்போது செர்பியாவில் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும், தான் தங்கியிருக்கும் ஓட்டலை சுற்றி பனி சூழ்ந்த மலைகள் காணப்படுவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply